Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 செட்டிகுளம்: அரசு மேல்நிலைப்பள்ளியில் 72வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஜனவரி 26, 2021 01:22

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 72 ஆவது குடியரசு தின விழா சமூக இடைவெளி கடைப்பிடித்தும் முககவசம்  அணிந்தும் மாணவர்கள் இன்றி  கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி தலைமை வகித்தார்.

ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுகரசு ஊராட்சி மன்ற  தலைவர் கலா தங்கராசு முன்னிலை வகித்தனர்.அடுத்த வருடம் பணி ஓய்வு பெறும் ஆசிரியை மனோசாந்தா தேசிய கொடியை ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து 12-07-2020 அன்று பெரம்பலூர் அருகே  செல்லியம்பாளையம் கிராமத்தில் கிணறு தோண்டும் பணியில்  சிக்கிக்கொண்ட நபர்களை காப்பாற்றும் பொருட்டு தன்னுயிரை நீத்த தீயணைப்பு வீரர் ரா.ராஜ்குமார் அவர்களுக்கு இந்திய ஜனாதிபதி அவர்களின் 2021 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின  வீரதீர பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதை மறைந்த தீயனைப்பு வீரருக்கு செம்மார்ந்த வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மணி,திருமதி தெய்வானை,லதா,முன்னாள் மாணவர் சங்க தலைவர் நடராஜன்,முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் ராஜாசிதம்பரம்,செட்டிகுளம்  ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் காமாட்சி ராமராஜ்,அரிமா சங்கத்தின் துணைத்தலைவர் செல்லப்பன் முன்னாள் பள்ளி மாணவர்கள் ராஜா,விஜய் அரவிந்த்,ஒளிப்பதிவாளர் சத்தியன் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் முடிவில் ஐஆர்சிஎஸ் மாவட்ட கிளையின் சார்பாக மாவட்ட கௌரவ பொருளாளர் வெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்,இரவு காவலர் அவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம்,சோப்பு வழங்கியும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செட்டிகுளம் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,உதவி தலைமை ஆசிரியர்கள்,சக ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்