Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் நமச்சிவாயம்

ஜனவரி 27, 2021 06:30

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தனர்.

 தற்போது அந்த கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இன்று காலை 11.30 மணிக்கு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய தீப்பாய்ந்தானும், மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் பாஜகவில் இணைகின்றன.

தலைப்புச்செய்திகள்