Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிரெசண்ட் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா

ஜனவரி 27, 2021 01:11

சென்னை : வண்டலூர் கிரெசண்ட் பல்கலைகழகத்தில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்தூர் ரஹ்மான் கிரெசண்ட் கல்லூரியில் 10வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் 31 பேருக்கு முனைவர் பட்டம், 390 பேருக்கு முதுகலை மற்றும் 1445 பேருக்கு இளங்கலை என மொத்தம் 1,865 பட்டத்தாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன.பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஐ.ஐ.டி பேராசியர்  அசோக் ஜூஞ்சூன்வாலா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில்  பல்கலைகழக துணை வேந்தர் ஆரிப், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்