Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடக அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகளை தவிர்க்க வேண்டும் - GK வாசன் பேட்டி

ஜனவரி 27, 2021 01:16

ஈரோடு: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி  மக்களை குழப்பி வருவது வேடிக்கையாகவும் நகைச்சுவையும்  கேலியாகவும் உள்ளதாகவும்  தேர்தலுக்காக  நாடக அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகளை தவிர்க்க வேண்டும்  ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான GK வாசன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வந்திருந்த  அக்கட்சியின்   தலைவரும் மேலவை உறுப்பினருமான  GKவாசன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும் போது : - வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடன் பல  முறை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக உறவு ஏற்படவில்லை என்பதற்கு அரசியல் ரீதியாக சிலர் விவசாயிகளை தவறான வழியில்  வழி நடத்துவதோடு நாட்டில் மக்களிடையே

கலவரத்தை தூண்டி வருவதாகவும் , தேவையின்றி நாள்தோறும் ஒரு போராட்டம் என நடத்தி வரும்   காரணத்தால் கோடிக்கானக்காண விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு  உள்ளதாகவும், டெல்லியில் நேற்று நடைபெற்ற சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் தெரிவித்த  GK வாசன் ,  அப்பாவி விசாயிகளுடன் சமூகவிரோத கும்பல் உள்ளே புகுந்து குடியரசு தினம் மற்றும்  நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும் , இந்த  சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றார்.

தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை தீர்க்கும்  திட்டத்தால் மக்கள் குழம்பி போய் உள்ளனர்.வேடிக்கையாக உள்ளதாகவும் , எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்ற GK.வாசன் ,   தேர்தலுக்காக  நாடக அரசியலை  செய்யக்கூடாது என்றார்.

ஜெயலலிதா நினைவு  மண்டபம் திறப்பதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள் கூறி GK வாசன் , ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பதிலிளத்த வாசன் ,  கண்மூடித்தனமாக ஆளும்கட்சி மீது குறை செல்வதால் வெற்றி வாய்ப்பு அதிகப்படுத்தலாம் என நினைப்பதாகவும் , ஆனால்  அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.

சசிகலா விடுதலையால் அதிமுக கூட்டணி  வெற்றி பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.முன்னதாக இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர் .  அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா . மற்றும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திரசேகர் , ஆறுமுகம் , கராத்தே சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்