Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுப்பாட்டை இழந்த கார் - இளைஞர்களின் நெகிழ்ச்சி சம்பவம் 

ஜனவரி 27, 2021 01:29

ஆலத்தூர்: ஆலத்தூர் அருகே எதிர் பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் கார் மோதிய விபத்தில் அதிர்ஷடவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய குடும்பத்தினருக்கு  இளைஞர்கள்  துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர் அவரது  குடும்பத்தினருடன் கொடுமுடியில் திருமணத்தை முடித்துக் கொண்டு கார் மூலம் நாட்டார்மங்கலம் வழியாக சிறுவாச்சூருக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரத  விதமாக கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் மின் கம்பத்தில் மோதியதில் காரில் பயணம் செய்தவர்கள்

லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மேலும் அங்கு இருந்த நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு டிராக்டர் மூலம் விபத்துக்குள்ளான காரை கயிறு கொண்டு  இழுத்து மீட்டனர். மேலும் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்