Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுக்கோட்டை ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஜனவரி 27, 2021 01:31

புதுக்கோட்டை : புதுக்கோட்டை டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள விஜய் திருமண மஹால் முன்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 25ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2ம் நாள்  2ம்  கால யாக பூஜைகள், எந்திர ஸ்தாபனம், 3ம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து  காலை 4ம் கால யாக பூஜைகள், லட்சுமி பூஜை, யாத்ரா தானம், கடம்  புறப்படுதல் நடைபெற்று

ஸ்ரீவிஜய விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் தீபாராதனையும், அறுசுவை அன்னதானமும் நடைபெற்றது.

யாகசாலை  பூஜைகள் பேரையூர் ராஜா கார்த்திகேய சிவாச்சாரியார் முன்னின்று நடத்தினார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விஜய் நிறுவன அதிபர் பழனிவேல், அவரது சகோதரர்கள் முருகானந்தம்,  ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேகத்தில் தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், ஆன்மீக அன்பர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்