Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனி

ஜனவரி 29, 2021 11:14

திருப்பதி:ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின்போது 5-ம் நாள் கருடசேவை உற்சவம் நடைபெறும். அன்று ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வருவார். அதேபோல் ஒவ்வொரு பவுர்ணமி மாதமும் பவுர்ணமியன்று இரவு கருட சேவை உற்சவம் நடைபெறும். அதன்படி, தை மாத பவுர்ணமியையொட்டி கருட சேவை உற்சவம் நேற்று இரவு நடந்தது.

இதில் கோவில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து ஏழுமலையான் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  வி.ஐ.பி. தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோவில் உண்டியல் மூலம் நேற்று ரூ.2.54 கோடி வசூலாகியுள்ளது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் கட்டண தரிசனத்திலும், இலவச தரிசனத்திலும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்