Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியா முழுவதும் 30 லட்சம் கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது

ஜனவரி 29, 2021 11:36

புதுடெல்லி: நாடுமுழுவதும் சுமார் 30 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.71 லட்சமாக (1,71,686) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.60 சதவீதம்.

கோவிட் மொத்த பரிசோதனை இன்று 19.5 (19,50,81,079) கோடியை கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 7,42,306 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி வரை, தமிழகத்தில் 88467 பேர், புதுச்சேரியில் 1813 பேர் உட்பட, சுமார் 30 லட்சம் (29,28,053) பேர் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 5,72,060 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை 52,878 தடுப்பூசி போடும் நிகழ்வுகள் நடந்துள்ளன. தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சுமார் 30 லட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 72.46 சதவீதம் பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், 3வது இடத்தில் ராஜஸ்தானும் உள்ளன.
 

தலைப்புச்செய்திகள்