Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எடு நகையை வாங்கு கடனை

ஏப்ரல் 05, 2019 07:36

சென்னை: கூட்டுறவு வங்கி மற்றும் பொதுத் துறை வங்கிகளில், 5 சவரன் நகையை அடமானமாக வைத்து, விவசாயிகள் வாங்கி இருக்கும் கடன்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்யப்படும். இப்படியொரு அறிவிப்பை திருப்பூரில் வெளியிட்டார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். 

தமிழக விவசாயிகள் குஷியாகி விட்டனர். வீட்டில் இருக்கும் நகைகளை துழாவி எடுத்து, அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளிலும், பொதுத்துறை வங்கிகளிலும் அடமானம் வைத்து கடன் வாங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வங்கிகளில் நகையை வைத்து விவசாய கடன் பெற, கூட்டம் அலைமோதுவதாக சென்னைக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஸ்டாலின் இதை அறிவித்த, 48 மணி நேரத்துக்குள், எட்டாயிரத்துக்கு மேலான விவசாயிகள், நகையை வைத்து கடன் பெற்றுள்ளதை வங்கி அதிகாரிகளும் ஊர்ஜிதம் செய்கின்றனர். இது மேலும் எகிற வாய்ப்பு இருக்கிறது. ஏன் இந்த திடீர் பரபரப்பு என விசாரித்தால் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒருவர், 5 சவரன் நகையை அடமானம் வைத்து, 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலுக்கு பின், கடன் தள்ளுபடி ஆனால், 50 ஆயிரம் லாபம். இதுதான் கூட்டம் அலைமோத காரணம். 

திமுக ஆட்சிக்கு வராவிட்டால்? வழக்கம்போல தவணையில் திருப்பி செலுத்துவோம். 'இதுபோன்ற அறிவிப்புகளை செயல்படுத்த, புதிய அரசு முடிவெடுத்தால், சமூகத்தில் கடும் விளைவுகள் ஏற்படும்' என, பொருளாதார வல்லுனர்கள் கொந்தளிக்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்