Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாத்மா காந்தி நினைவு தினம்- தலைவர்கள் அஞ்சலி

ஜனவரி 30, 2021 11:16

புதுடெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

புதுடெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் காந்தியின் விருப்பமான பஜனை பாடலான ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ பாடல் ஒலிபரப்பப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்