Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசியில் போலியோ சொட்டு மருந்து முகாம்:  அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்தார்

ஜனவரி 31, 2021 09:02

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி துவக்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கினார்.

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவிலிருந்து ஒழிக்கும் பொருட்டு கடந்த 1995-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் தென்காசி மாவட்டத்தில் சுமார் 1,17,714 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இம்மையங்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ‘நடமாடும் முகாம்’ மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், தென்காசி மாவட்டத்தில் 30 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தலைப்புச்செய்திகள்