Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேனியில் அம்மா மினி கிளினிக்குகள் அங்கன்வாடி மையம் திறப்பு

ஜனவரி 31, 2021 09:07

தேனி: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி, குள்ளப்புரம், சருத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளை மாவட்ட வருவாய் அலுவலர் .ரமேஷ் முன்னிலையில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 33 கிராமப்புற பகுதிகளில் அம்மா மினி கிளினிக்களும், அதனைத்தொடர்ந்து, தமிழக துணை முதல்வரின் சீரிய முயற்சியால் 6 கிராமப்புற பகுதிகளில் அம்மா மினி கிளினிக்களும் மொத்தம் 39 கிராமப்புற பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள் மற்றும் 4 நடமாடும் அம்மா மினி கிளனிக்குகள் என மொத்தம் 43 அம்மா மினி கிளினிக்குகள் திறந்திட ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 25 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி, குள்ளப்புரம், சருத்துப்பட்டி ஆகிய பகுதிகளில்; 3 அம்மா மினி கிளினிக்குகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டங்களை வழங்கப்பட்டது.

மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் குள்ளப்புரத்தில் ரூ.9.08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்திற்கான புதிய கட்டடம், கால்நடை பராமாpப்புத்துறையின் சார்பில் நபார்டு வங்கி நிதியுதவி திட்டத்தின் கீழ் வடபுதுப்பட்டி - அம்மாபட்டியில் ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்தவமனைக்கான புதிய கட்டடம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளின் போது, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஊராட்சித்தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் செந்தில்அண்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்