Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலியோ சொட்டு மருந்து முகாம்: தஞ்சையில் ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்

ஜனவரி 31, 2021 10:06

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது இந்த முயற்சியால் கடந்த 2004ம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்த குழந்தைகளுக்கும் பாதிப்பு இல்லை இதனையடுத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு அளிக்கப்படுகின்றது.

இதன்மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழல் இருந்து அறவே ஒழிக்கலாம் இந்த முகாம் மூலம் சுமார் 229141 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது தஞ்சை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் 128 மையங்களும் ஊரக பகுதிகளில் 1382 மையங்களும் என மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளிக்கூடங்கள் அரசு மருத்துவமனைகள் புகைவண்டி நிலையங்கள் கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது தஞ்சாவூரில் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் போலியோ மருந்தினை குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வழங்கி தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்