Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அடுத்தவாரம் பள்ளி திறப்பு

பிப்ரவரி 01, 2021 12:33

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு வகுப்புகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.  இந்த நிலையில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி அடுத்த வாரம் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல கல்லூரி முதல் ஆண்டு, 2-ம் ஆண்டு மற்றும் தியேட்டர், வணிக வளாகம், நீச்சல்குளம் ஆகியவற்றையும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விழாக்களில் இதுவரை 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அது 200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்