Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா போட்டி

பிப்ரவரி 02, 2021 12:01

கோவை:அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தெற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவை செல்வபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சரத்குமார் மற்றும் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் ஆகியோர் பேசினர். 

1996-ல் தி.மு.க ஆட்சியை பிடிக்க நானும் ஒரு முக்கிய காரணம். ஆனால் தி.மு.க எனக்கு துரோகம் செய்துவிட்டதாக நான் கூறவில்லை. அங்கிருந்து நான் வெளியேற வேண்டிய சூழல் உருவாகி விட்டது. எங்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் தான் நீடிக்கிறது. அ.தி.மு.க சார்பில் கூட்டணி குறித்து பேசும்போது தான் எவ்வளவு இடங்களில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்படும்.

அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றாலும், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். ஒன்று, 2 இடங்களில் போட்டியிடமாட்டோம். அதிக இடங்களில் தான் போட்டியிடுவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் மகளிரணி பொறுப்பில் உள்ள ராதிகா சரத்குமார் போட்டியிடுவார். மத்திய அரசின் பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு நேரடி உதவிகள் எதுவும் இல்லை. ஆனால் மறைமுக உதவிகள் உள்ளன என்று சரத்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்