Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்கள்

பிப்ரவரி 02, 2021 12:04

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 12 ஏக்கரில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தனர். திருக்கோவிலில் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரது 7 அடி உயர 400 கிலோ எடையுள்ள வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

 இந்த கோவிலில் தினமும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்யும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள், வெளியூர்களில் இருந்து வரும் அ.தி.மு.க.வினர் எந்த நேரமும் கும்பிட்டு செல்லும் வகையில் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் அந்த வழியாக செல்லும் அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பொதுமக்களும் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு சூடம் எற்றி வழிபடுகிறார்கள். மேலும் சிலைகள் அருகில் நின்று செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். இதனால் அங்கு எந்த நேரமும் பொதுமக்கள் சென்று வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்