Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல - ராகுல் காந்தி டுவீட்

பிப்ரவரி 02, 2021 12:15

புதுடெல்லி:வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறை நடைபெற்றது. மேலும், விவசாயிகளின் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.

பின்னர் போலீசார் விவசாயிகளை அப்புறப்படுத்தினர். தற்போது நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தின்போது மீண்டும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதி டெல்லி போலீசார் அதிக அளவில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கைகலப்பு ஏற்படாத அளவிற்கு போலீசார் முன்னேற்பாடுகள் செய்து வைத்துள்ளனர். எல்லையில் உள்ள சாலைகளை தோண்டி டிராக்டர் வர முடியாத அளவிற்கு செய்துள்ளனர். பின்னர், சாலையின் குறுக்கே கான்கிரீட் கற்களை கொண்டு வைத்து மறைத்துள்ளனர்.

அதற்கு பின்னால் போர் வீரர்களை நிறுத்துவது போன்று போரிகார்டுகளை வைத்துள்ளனர். கான்கிரீட் கற்களை அடுத்து சாலைகளை தோண்டி ஆணிகளை வைத்துள்ளனர். இந்த படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி ‘‘பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல’’ எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்