Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயத்தில் இடைத்தரகர்களை ஒழிப்பது சவாலாக உள்ளது

பிப்ரவரி 03, 2021 05:42

வேலூர்: வேலூர் டோல்கேட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங் கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பேசும்போது, ‘‘விவசாயிகள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் இருந்து ரூ.1.70 லட்சம் கடன் 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. விவ சாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம், பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. வேலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலர் பயிர் காப்பீடு செய்யாமல் உள்ளனர்.
ஆனால், ‘நிவர்’ புயல் தாக்கத்தின்போது அதிகளவில் பயிர் சேதம் ஏற்பட்டது. பயிர் காப்பீடு செய்யாததால் உரிய இழப்பீடு வாங்க முடியவில்லை. விவசாய உற்பத்திக்கு அதிக செலவு மற்றும் உரிய விலை கிடைப்ப தில்லை. இடைத்தரகர்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. விவசாயத்தில் இடைத்தரகர் களை ஒழிப்பது பெரும் சவாலாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இடைத்தரகர்களை ஒழிக்க பல் வேறு குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
வேளாண் உற்பத்தியில் இடு பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது. இதனால், இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். தொடக்கத்தில் விளைச்சல் குறைவாக இருந்தால் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும். மேலும், வீரியம் மிக்க விதைகள் பயன்படுத்துவதை தடுக்க வேண் டும். விளைச்சலில் ஒரு பகுதியை விதைகளாக மாற்ற விவசாயிகள் அவற்றை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்