Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 04, 2021 11:19

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மத்திய அரசின் தொழிலாளர் விரோத  சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்கிடும் திட்டத்தைக் கைவிடக் கோரியும், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அண்மையில் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் எதிராக, பல்வேறு  சட்டங்களை இயற்றியுள்ளது. இந்த புதிய சட்டங்களினால், அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் முழுமையாக பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு,  தொழிலாளர்களுக்கு எதிரான, அனைத்து சட்டங்களையும், திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்கிடும் திட்டத்தைக் கைவிடக் கோரியும்,  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக, திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் கோரிக்கை முழக்க மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தொ.மு.ச. தலைவர் தர்மன் தலைமை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் மோகன், நிர்வாகிகள் முருகன், பெருமாள், பீர்முகம்மது ஷா, காமராஜ், மணிகண்டன்,  ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலாளர் சடையப்பன், பாலு, ரங்கன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயம் ஆக்கிடும் திட்டத்தைக் கைவிடக் கோரியும் கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
 

தலைப்புச்செய்திகள்