Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் 18 நாளில் 40 லட்சம் பேருக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

பிப்ரவரி 04, 2021 12:52

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதியை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கப்பட் டது. டாக்டர்கள், முன்கள பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நாடு முழுவதும் மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பு மருந்து பெறுவதற்காக பதிவு செய்தவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகிலேயே இந்தியாவில் தான் தடுப்பூசி வேகமாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 16-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

18 நாட்களில் தடுப்பூசி பெறுவதற்காக பதிவு செய்தவர்களில் 40 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 2.40 லட்சம் பேர் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர். நேற்று மாலை வரை 43.88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பொது மற்றும் தனியார் பிரிவுகளில் தடுப்பூசிக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் 47 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 18 நாட்களில் 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லட்சத்தீவில் 90 சதவீதம் தடுப்பு மருந்து போடப்பட்டு இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் 69.4 சதவீதமும், ராஜஸ்தானில் 64.7 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 50 சதவீதமும், ஒடிசா, கேரளா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் 50 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 41.1 சதவீதமும், கர்நாடகாவில் 40.9 சதவீதமும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.தடுப்பு மருந்துக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் தமிழ்நாட்டில் 22.6 சதவீதம் பேர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். டெல்லியில் 26.6 சதவீதமாகவும், புதுச்சேரியில் 12.3 சதவீதமாகவும் உள்ளது.

தலைப்புச்செய்திகள்