Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் இளவரசி

பிப்ரவரி 05, 2021 10:44

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதில் தண்டனை காலம் நிறைவடைந்ததால் கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.

 இளவரசியின் தண்டனை காலம் நிறைவு பெற்றதும் பிப்ரவரி 5-ந் தேதி (இன்று) விடுதலை ஆவார் என்று பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதன்படி அவர் இன்று வெள்ளிக்கிழமை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். 4 ஆண்டு தண்டனைக்காலம் முடிந்ததால் சசிகலாவை தொடர்ந்து சிறையில் இருந்து இளவரசியும் விடுதலையானார்.
 

தலைப்புச்செய்திகள்