Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரும் 11-ந்தேதி மக்கள் நீதி மய்ய பொதுக்குழு கூட்டம்

பிப்ரவரி 05, 2021 10:50

சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரித்தல், பிரசார பயணம் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் சந்தோஷ்பாபு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ந்தேதி கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மாநாடு உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். எனவே கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களாகிய தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர்கள், சார்பு அணியின் மாநில செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் அனைவரும் பொதுக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்