Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்திற்கு தடை

ஏப்ரல் 05, 2019 12:39

மதுரை: தமிழக லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. கரூரை சேர்ந்த ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்; கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் ராஜாராமும், அரசியலில் தொடர்புடைய ஆறுமுகமும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டது சட்டத்திற்கு எதிரானது. இவர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். விதிகளை பின்பற்றவில்லை 

இதனை விசாரித்த கோர்ட்; இருவரின் நியமனத்தில் உரிய விதிகளை பின்பற்றவில்லை. இருவரின் நியமனத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும் நியமனம் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை 22க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என  நீதிபதி கூறினார்.

தலைப்புச்செய்திகள்