Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் 2 பேருக்கு எதிரான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து

பிப்ரவரி 06, 2021 06:00

சென்னை:முருகக்கடவுளின் பாடலான கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக சித்தரித்து கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் ஒரு பதிவை வெளியிட்டது. இந்த பதிவு இந்து மக்களின் மனதை புண்படும் விதமாக உள்ளது என்று கூறி பா.ஜ.க. வக்கீல் பிரிவு தலைவர் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ், போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, யூடியூப் சேனல் உரிமையாளர் செந்தில் வாசன், தொகுப்பாளர் சுரேந்திரன் என்ற நாத்திகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். இவர்களில் செந்தில்வாசனையும், சுரேந்திரனையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், வி.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருவருக்கும் எதிராக போலீஸ் கமிஷனர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு சரியானதல்ல என்றும், அதை ரத்து செய்தும் தீர்ப்பு அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்