Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி அபராதம் வசூல்

பிப்ரவரி 08, 2021 05:51

மும்பை :மும்பையின் உயிர்நாடியான மின்சார ரெயிலில் தினமும் சுமார் 85 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கொரோனா பிரச்சினை காரணமாக 10 மாதங்களாக பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய முடியாமல் இருந்தனர். இந்த மாதம் முதல் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். அதற்கு முன் அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வந்தனர்.

இந்தநிலையில் 17 நாளில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.58 லட்சம் பேர் பிடிப்பட்டு உள்ளனர். இதுகுறித்து மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஜனவரி 15-ந் தேதி முதல் 31 தேதி வரை மத்திய ரெயில்வே வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது டிக்கெட் இன்றி பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே 95 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதில் 1.21 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து ரூ.2.87 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல எக்ஸ்பிரஸ் ரெயில்களில்  செய்த 37 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து சுமார் ரூ.2 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது " என்றார்.
 

தலைப்புச்செய்திகள்