Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடவுள் ஆணையிட்டதாக கூறி 6 வயது மகனை கொன்ற தாய்

பிப்ரவரி 08, 2021 01:15

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பூளக்காடு பகுதியை சேர்ந்த டாக்சி டிரைவர் சுலைமான். இவரது மனைவி ஷாகிதா (வயது28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஷாகிதா கர்ப்பமாக உள்ளார். சம்பவத்தன்று இரவு சுலைமான், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அதிகாலை 4 மணியளவில் ஷாகிதா 6 வயது மதிக்கத்தக்க தனது இளைய மகன் ஆமீலை குளியல் அறைக்கு தூக்கிச் சென்றார்.தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை பெற்ற மகன் என்றும் பாராமல் ஷாகிதா கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். தனது மகனை கொன்ற தகவலை பாலக்காடு போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து ஷாகிதா தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் குளியல் அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த சிறுவன் ஆமீலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மகனை கொன்ற ஷாகிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் அமர்ந்திருந்தார். அவரிடம் மகனை கொன்றதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மகனை தனக்கு பலியிடுமாறு கடவுளிடம்

இருந்து கட்டளை வந்ததால், மகன் ஆமீலை கழுத்தறுத்து கொன்றதாக ஷாகிதா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் வந்து வீட்டு கதவை தட்டிய பிறகே தனது மகனை, மனைவி கழுத்தறுத்து கொன்ற சம்பவம் சுலைமானுக்கு தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்