Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமானப் பயணங்களை எளிதாக்க தடுப்பூசி பாஸ்போர்ட் 

பிப்ரவரி 08, 2021 01:50

புதுடெல்லி: உலகளவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் குறையாமல் நீடிப்பதால் பல்வேறு நாடுகளில் விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர் பப்பிள்ஸ் எனப்படும் இரு தரப்பு ஒப்பந்தம் மூலம், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சில நாடுகள் விமானங்களை இயக்குகின்றன. 

தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து சீரடைந்து வருவதாலும், தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியிருப்பதாலும், சர்வதேச பயணங்கள் மேற்கொள்வோருக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரொனா தடுப்பூசிகளுக்குத் தயாராகி வரும் நிலையில், எல்லை தாண்டிய பயணத்தை எளிதாக்குவதில், அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் தடுப்பூசி போட்ட தகவல்களை ஆவணப்படுத்துவது முக்கியமானதாகும்.

குறிப்பாக, விமான நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் விரைவில் மக்கள் தங்கள் தடுப்பூசி நிலை தொடர்பான ஆவணத்தை காட்ட வேண்டும். இந்த நடைமுறையை மிகவும் எளிதாக்கும் வகையில், தடுப்பூசி பாஸ்போர்ட் அறிமுகமாகி உள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது, கையில் எடுத்துச் செல்லும் வகையிலான பாஸ்போர்ட் கிடையாது.

டிஜிட்டல் வாலெட்டுகள் போன்றது. தனிநபர்கள் தங்களின் உடல்நிலை சார்ந்த தகவல்கள், மருத்துவ குறிப்புகள் மற்றும் சான்றிதழ்களை சேமித்து வைக்க உதவும் செயலி (ஆப்) ஆகும். பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அவர்களின் சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவு, உடல் வெப்பநிலை ஸ்கேன் மற்றும் தடுப்பூசி செலுத்திய தகவல்களின் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். 

டென்மார்க் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை ஏற்றுக்கொண்டு அறிமுகம் செய்துள்ளன. இரு நாடுகளும் இதேபோன்ற தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்களை அறிவித்துள்ளன.டென்மார்க்கில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோருக்கான,

பயணக் கட்டுப்பாடுகளை எளிதாக்க கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு, டிஜிட்டல் கொரோனா பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை நான்கு மாதங்களுக்குள்  வணிகமயமாக்குவதாகவும், அதன்மூலம் தொழில் சார்ந்த பயணங்களுக்கு இதை பயன்படுத்தலாம் என்றும் அந்நாட்டின் நிதி மந்திரி கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்