Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மார்ச் 7ம் தேதி ஸ்போர்ட்டனா அகாடமி நடத்தும் பெண்களுக்கான இறகுப்பந்து போட்டி

பிப்ரவரி 08, 2021 03:30

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கான மிகப்பெறும் இறகுப்பந்து போட்டியை நடத்தவுள்ளது சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி.

ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பிலும் அன்றைய தினம் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் மகளிர் தினத்தை போற்றும் விதமாக மார்ச் 7ம் தேதி முற்றிலும் பெண்களுக்கான இறகுப் பந்து போட்டியை நடத்துகிறது ஸ்போர்ட்டனா அகாடமி.

பூக்குவளை போல இருக்கும் இறகுகளாலான பந்தினை (Shuttlecock) இறுக்கமாகப் பின்னிய வலை மட்டையினால் (Racquet) வலைக்கு மேலே போய் எதிரணியினரின் ஆடுகளப் பகுதியில் விழும்படி அடித்து விளையாடும் விளையாட்டான இந்த இறகுப் பந்தாட்டத்தில் மகளிர்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. அதை கருத்தில் கொண்டே ஸ்போர்ட்டனா அகாடமி இந்த போட்டியை சிறப்பாக நடத்துகிறது.

13 வயது சிறுமி முதல் அனைத்து வயது பெண்களும் பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடத்தை பிடிக்கும் மகளிர்க்கும் கேடயம் , பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. அதோடு இப்போட்டியில் பங்குபெறும் அனைத்து மகளிர்க்கும் சான்றிதழ் மறறும் பதக்கம் வழங்கப்படும்.  மார்ச் 7ம் தேதி (07.03.2021) ஞாயிற்றுக்கிழமை சென்னை மேல் அயணம்பக்கம், சதீஷ் சிவலிங்கம் ஸ்டேடியத்தில் இந்த பெண்களுக்கான இறகுப்பந்து போட்டி நடைபெறுகிறது. 

மேலும் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் MGM DIZZEE WORLD இலவச கூப்பன் வழங்கப்படும் , இதுகுறித்த மேலும் விபரங்களை 9380869045 / 8778394729 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும், போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் https://surveyheart.com/form/601ebfd191f67661c6ac14eb என்ற இணைப்பில் சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும்  ஸ்போர்ட்டனா அகாடமி தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்