Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேல்சபை எம்.பி. பதவிக்கு கேரளாவில் குலாம்நபி ஆசாத் போட்டி

பிப்ரவரி 09, 2021 12:00

திருவனந்தபுரம்: காங்கிரசின் மூத்த தலைவராக இருப்பவர் குலாம்நபி ஆசாத். ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். விரைவில் இவரது பதவி காலம் முடிகிறது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு காஷ்மீரில் 370-வது சட்ட பிரிவை மத்திய அரசு நீக்கிய பின்னர் இன்னும் அந்த மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை. இதனால் குலாம்நபி ஆசாத் அங்கு போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது.

இந்தநிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் வயலார் ரவி, இந்திய முஸ்லிம் லீக் அப்துல் வகாப் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ராகேஷ் ஆகியோரின் டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைகிறது.

இதில் இரு உறுப்பினர் பதவிக்கு கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியும், ஒரு இடத்திற்கு காங்கிரஸ் கட்சியும் உறுப்பினரை தேர்வு செய்யமுடியும். காங்கிரஸ் கட்சி சார்பாக மேல்சபை எம்.பி. பதவிக்கு குலாம்நபி ஆசாத் போட்டியிடுகிறார். குலாம்நபி ஆசாத்தை தேர்வு செய்வதன் மூலம் கேரளாவில் 22 சதவீதம் உள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகளை கவர உதவியாக இருக்கும் என காங்கிரசார் கருதுகின்றனர். எனினும் கேரள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தலைப்புச்செய்திகள்