Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கத்தினர் சார்பில்  ஒரு நாள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 12, 2021 10:26

புதுக்கோட்டை: அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தகாரர்கள் சங்கம் சார்பில் இரும்பு, கம்பி சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
அகில இந்திய பொறியியல் கட்டுனர் ஒப்பந்தகாரர்கள் சங்க தலைவர் கருணாநிதி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிமெண்ட் மற்றும் கம்பி உற்பத்தியாளர்களின் வர்த்தக போக்கை கட்டுப்படுத்துவதற்காக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும், எஃகு கம்பிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு உடனடியாக முழு தடையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரும்புத்தாது மற்றும் எஃகு ஸ்கிராப் பொருட்களுக்கு இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வன், முத்துக்குமார், கனகராஜ், அருள்சாமி, முருகேசன், ரமேஷ், ஷாஜகான் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் உள்ள அகில இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், அகில இந்திய கட்டிட பொறியியல் கட்டுனர் ஒப்பந்தகாரர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்