Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி வருகை- சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிப்ரவரி 12, 2021 12:19

சென்னை: பிரதமர் மோடி வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை விமானம் மூலம் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரையில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். தளத்திற்கு ஹெலிகாப்டரில் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் சுமார் 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் நிருபரிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சென்னை வருகையின்போது 1 லட்சம் பேர் வருவதாக தகவல் வருவதால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சென்னையில் மெரினா கடற்கரை சாலை, அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு பகுதிகளில் 14-ந் தேதி காலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு இன்று மாலை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்