Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2098 முதுகலை ஆசிரியர் பணிக்கு மார்ச்-1 முதல் விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி 12, 2021 12:20

சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ந்தேதி 40 வயதை பூர்த்தி செய்தவர்கள் தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மார்ச் 1-ந்தேதி முதல், மார்ச் 25-ந்தேதி மாலை 5 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக முதுகலை போட்டித் தேர்வுக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போதே உரிய சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போட்டித் தேர்வுகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பாட வாரியாக காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை குறித்த பல்வேறு விவரங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மிக முக்கியமாக வரும் ஜூலை 1-ந்தேதி 40 வயதை பூர்த்தி செய்தவர்கள் நேரடி நியமனத்திற்கு அனுமதி கிடையாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக அரசு நேரடி நியமனத்திற்கான வயது வரம்பு 40 என நிர்ணயித்ததை சுட்டிக்காட்டி 40 வயது பூர்த்தியாகி இருந்தால் அனுமதி கிடையாது என்று தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் ஐந்து ஆண்டுகள் கூடுதலாக அனுமதிக்கப்படுவர் என்றும், அதன்படி 45 வயது வரை இருப்பவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்