Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாளை மாலை 4 மணிக்குப்பதில் காலை 10 மணிக்கு மக்களவை தொடங்குகிறது

பிப்ரவரி 12, 2021 01:19

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றம் கடந்த மாதம் 29-ந்தேதி கூடியது. ஜனாதிபதி உரையுடன் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கூடிய நிலையில், பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம், அதற்கான பதில் அளிப்பு நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இடைவெளி விட்டு அமர்தல் போன்றவற்றால் மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலை 4 மணிக்கும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை மக்களவை காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்