Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் கேரளா செல்கிறார்

பிப்ரவரி 12, 2021 01:24

திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள்(14-ந்தேதி) கேரள மாநிலம் வருகிறார். அன்று காலை சென்னை வரும் அவர், அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 2.45மணிக்கு கொச்சி விமானப்படை விமான தளத்திற்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காக்கநாடு செல்கிறார். அங்குள்ள ஹெலிபேடில் நரேந்திர மோடி செல்லும் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. அங்கிருந்து கார் மூலம் பிரதமர் நரேந்திரமோடி அம்பலமேடு செல்கிறார்.

அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் மாலை 3.30 மணிமுதல் 4.30 மணி வரை நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய குழு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்தில் கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் மேற்கொள்ளும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

மேலும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன், மத்திய மந்திரி முரளிதரன், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜ சேகரன், கேரளாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ள ராஜ கோபால் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்பு மாநில தலைவர் சுரேந்திரன் நடத்தும் யாத்திரையை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். அந்த யாத்திரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திரமோடி, மாலை 5.55 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு கேரள மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தலைப்புச்செய்திகள்