Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை- மு.க.ஸ்டாலின் பேச்சு

பிப்ரவரி 13, 2021 10:28

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குப்பம் ஊராட்சி, காரணையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க. ஆட்சி அமைவது என்பது உங்களது கவலைகளை தீர்ப்பதற்காகத்தான். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத்தான்.

உங்களது எண்ணங்களை அமல்படுத்துவதற்காகத்தான் என்பதை மக்கள் முதலில் உணர்ந்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் செல்போன் தரப்படும் என்று சொன்னார்களே? செய்தார்களா? இல்லை. எடப்பாடி பழனிசாமி கொடுத்தாரா? இல்லை.

அல்வா தான் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். 'எல்லா மக்கள் குறையையும் நான் தீர்த்துவிட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு கொடுக்கவில்லை' என்றும் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். மனு கொடுத்த நீங்கள் மக்கள் இல்லையா? வானத்தில் இருந்து குதித்து வந்துள்ளீர்களா?. ஒரு முதல்-அமைச்சர் பேசுகிற பேச்சா இது? கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி எதையும் செய்யவில்லை என்பதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் மனுக்களின் மூலமாக சொல்லி வருகிறார்கள்.

இந்த லட்சணத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்த குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகளை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்று ஸ்டாலின் கூறினார்.

தலைப்புச்செய்திகள்