Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காதலர் தின சலுகைகள் அறிவித்த சியோமி

பிப்ரவரி 13, 2021 01:54

காதலர் தினத்தை முன்னிட்டு சியோமி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சிறப்பு சலுகை விற்பனையை அறிவித்து இருக்கிறது. சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவன சாதனங்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறப்பு விற்பனை சியோமி இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.

காதலர் தின சிறப்பு விற்பனையில் அணியக்கூடிய சாதனங்கள், ஆடியோ, ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஐஒடி சாதனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல் விலை ரூ. 10,999 இல் இருந்து தற்சமயம் ரூ. 7,999 என குறைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரெட்மி பேண்ட் மாடல் விலை ரூ. 1,599 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,399 என குறைக்கப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்