Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் ராணுவ தயாரிப்புகள் எல்லையை பாதுகாக்கும்-மோடி

பிப்ரவரி 14, 2021 10:46

சென்னை:வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு, நான் சென்னை வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு அனைவருக்கும் நன்றி.தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய முக்கிய கட்டமைப்பு திட்டங்கள் தமிழக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். நாம் 636 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கல்லணை கால்வாய் அமைப்பை புதுப்பித்து நவீனமாக்குவதற்காக அடிக்கல் நாட்டி உள்ளோம்.

இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கப் போகிறது. நீர்பாசனத்தை மேம்படுத்தும், குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும். சாதனை படைக்கும் வகையில் உணவு தானிய உற்பத்தி செய்தமைக்கும், நீர் ஆதாரங்களை பயன்படுத்தியதற்கு நான் தமிழ்நாடு விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவராலும் போற்றப்படும் அவ்வையார் பாடலில் ‘‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்’’ என்று கூறி உள்ளார். நீர் உயரும் போது சக குடி உயரும். நாடு வளம் பெறும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தண்ணீர் சொட்டையும் நாம் பாதுகாக்க வேண்டும், பராமரிக்க வேண்டும்.

இது இந்த நாட்டின் பிரச்சனை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சனை. இதனால் நாம் நீர் ஆதாரங்களையும், நீரையும் பாதுகாக்க வேண்டும். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9.05 கிலோ மீட்டர் நீளம் உள்ள மெட்ரோ ரெயில் முதல் கட்ட விரிவாக்கத்தை நாம் தொடங்கி இருக்கிறோம். சிவில் கட்டுமானங்களை இந்திய நிறுவனங்களே மேற்கொண்டன.சென்னை மெட்ரோ விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வலை பின்னல் 54 கிலோ மீட்டராக உள்ளது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் 119 கிலோ மீட்டர் நீளம் உள்ள மெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு ரூ.63 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நகரத்துக்கு அளிக்கப்படும் மாபெரும் திட்டங்களில் இதுவும் ஒன்று. நகர்புறத்திலும் மீதான போக்குவரத்து புவி மையம் இங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கும். சென்னை கடற்கரை- அத்திப்பட்டு மார்க்கம் அதிக பயண நெரிசல் மிக்கதாகும். சென்னை துறைமுகத்துக்கும்- காமராஜர் துறைமுகத்துக்கும் சரக்கு போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டி இருந்தது.

இதற்கு சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையேயான நான்கு ரெயில் வழித்தட பாதை பேருதவியாக இருக்கும்.விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ரெயில் திட்டத்தை மின்மயமாக்கி இருப்பது டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த 228 கிலோ மீட்டர் நீளம் உள்ள ரெயில்வே தடம் மிகப்பெரிய பயன்களில் ஒன்று. உணவு தானியங்களின் விரைவான போக்குவரத்துகளில் ஒன்று. இன்றைய நாளில் நடந்த துர்பாக்கிய சம்பவத்தை மறந்துவிட முடியாது. அது புல்வாமா தாக்குதல். நமது படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

உலகிலேயே தொன்மை மொழியான தமிழின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதி இருக்கும் வரி. ஆயுதம் செய்வோம். நல்ல காகிதம் செய்வோம். ஆலைகளை செய்வோம். காகிதங்களை செய்வோம். கல்வி, நிறுவனங்களை செய்வோம். உலகை உலுக்கும் கப்பல்களை செய்வோம் என்று கூறி உள்ளார்.தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நாட்டின் வடக்கு எல்லையில் பயன்படுத்தப்பட இருக்கிறது. ‘அர்ஜுன் பீரங்கி ’ தயாரிப்பின் மூலம் பீரங்கி உற்பத்தி மையமாக தமிழகம் உருவெடுக்கிறது.தமிழகத்தின் ராணுவ தயாரிப்புகள் லடாக்கில் உள்ள நமது எல்லைகளை பாதுகாக்கும் என்பதே பெருமை என்று பிரதமர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்