Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெருசலேமுக்கு இனி 1000 பேர் செல்லலாம்- முதலமைச்சர்

பிப்ரவரி 15, 2021 01:48

கோவை: கோவையில் தமிழக கிறிஸ்தவ ஜனநாயக கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு ஆண்டுதோறும் இனி 1,000 பேர் செல்லலாம்.தமிழகத்தில் இருந்து 600 பேர் வரை சென்றுவந்த நிலையில் இனி 1,000 ஆக உயர்த்தப்படும்.

அவரவர் மதம் அவரவருக்கு பெரியது. மற்ற மதத்தை தவறாக பேசுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.தமிழக கல்வித்தரம் உயர்வுக்கு கிறிஸ்தவ பள்ளிகள் முக்கிய காரணம்.தேர்தலில் கூட்டணி மாறும், ஆனால் கொள்கைகள் மாறாது.சிறுபான்மை மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்