Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம்- மம்தா பானர்ஜி 

பிப்ரவரி 15, 2021 02:17

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகள், மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி பிரசாரத்தை தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகளும் பிரசாரம் செய்து வருகின்றன.

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். அதேசமயம் பா.ஜனதா கடும் சவாலாக விளங்கி வருகிறது.இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் மம்தா பானர்ஜி. ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டைக்கறி கிடைக்கும்.

ஒரு பிளேட் சாப்பாட்டிற்கு மாநில அரசு 15 ரூபாய் மானியமாக வழங்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சுய உதவிக்குழுக்களால் மதியம் 1 முதல் 3 மணி வரை இந்த உணவுக்கூடம் இயங்கும். படிப்படியாக மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவு படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்