Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் ‘டெஸ்லா’வின் தயாரிப்பு ஆலை

பிப்ரவரி 15, 2021 03:22

பெங்களூர்: டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பு ஆலை கர்நாடக மாநிலத்தில் அமைய இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரி வித்தார்.எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மின்சாராக் கார்தயாரிப்புக்கு மிகவும் பிரபலமானது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம், அதன் இந்தியப் பிரிவுக்கானப் பெயரைகடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து பெங்களூருவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வுமற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, டெஸ்லாவின் கார் தயாரிப்புஆலை கர்நாடக மாநிலத்தில் அமைய இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இது இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் அமைக்கும் முதல் தயாரிப்பு ஆலை. ‘மாடல் 3' என்ற செடான் மாடலே இந்தியாவில் விற்பனையாக இருக்கும் டெஸ்லாவின் முதல் மாடல் ஆகும்.

தலைப்புச்செய்திகள்