Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக இடைக்கால பட்ஜெட் வருகிற 23-ந்தேதி தாக்கல்

பிப்ரவரி 16, 2021 11:41

சென்னை:தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். 5-ந் தேதி சபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது. இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை வருகிற 23-ந் தேதி முற்பகல் 11 மணிக்கு கலைவாணர் அரங்கில் உள்ள பல்வகை கூட்டரங்கில் பேரவை தலைவர் கூட்ட உள்ளார். மேலும் அன்று 2020- 2021-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்