Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை- முதலமைச்சர் வெளியிட்டார்

பிப்ரவரி 16, 2021 11:52

சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார்.

28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் 3,489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கம் என மொத்தம் 46 திட்டப் பணிகளை 33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாபெரும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஓட்டல் லீலா பேலசில் தொழில் துறை சார்பில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க புதிய தொழில் கொள்கை 2021 வெளியிடப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திடவும்,

2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்து, புதிய வெற்றிப் பயணத்தினை துவக்கி வைத்து, இந்த புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில், மேலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன

தலைப்புச்செய்திகள்