Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமூக ஆர்வலர்களை தேர்தலில் நிறுத்த திட்டம்- கமல்ஹாசன்

பிப்ரவரி 16, 2021 12:52

சென்னை:கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாக களம் இறங்கியுள்ளது.3-வது அணியை அமைப்பதில் உறுதியுடன் இருக்கும் கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியில் இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளார்.பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த 2 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதுபோல் சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை சமூக ஆர்வலர்களுக்கு ஒதுக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் பிரசார வியூகத்தை வகுத்துள்ள கமல்ஹாசன், 3-வது அணி அமையாவிட்டால் தனித்து போட்டியிட ஆயத்தமாகி உள்ளார்.அனைத்து தொகுதிகளிலுமே அரசியல் கட்சிகளை சாராதவர்கள் சிலர் நிச்சயம் மக்களுக்காக பணியாற்றி வருவார்கள்.

அதுபோன்ற நபர்கள் யார்- யார்? என அடையாளம் கண்டுபிடிக்கவும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனை மனதில் வைத்தே கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இல்லாதவர்களும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளிக்கலாம் என்று அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்