Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் முழுவதுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அலையே வீசி வருகிறது

பிப்ரவரி 18, 2021 11:11

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்தமபாளையத்தில் தி.மு.க. சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் மக்கள் குறை கேட்கும் கூட்டம் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கம்பம் தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதன்பிறகு பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர். அதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை தனது சொந்த தொகுதியான போடியில்கூட எட்டி பார்க்கவில்லை. தனது மகனுக்கு பதவி வாங்குதற்காக டெல்லி வரை சென்றார். ஆனால் தனக்கு வாக்களித்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் மலை கிராமங்களுக்கு கூட நடந்து சென்று குறைகள் கேட்டு வருகிறார். ஆண்டிபட்டியில் 7500-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இதனை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்களின் பிரச்சினை இன்னும் தீராத நிலையில் உள்ளது.

தனது சொந்த மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அலையே வீசி வருகிறது. ஜெயலலிதாவுக்காக தர்ம யுத்தம் நடத்தியவர் தற்போது அதுபற்றி எதுவும் பேசாமல் பதவிக்காக மட்டுமே உள்ளார். பழைய கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்து அதனை புதிய திட்டம்போல அடிக்கல் நாட்டி திறப்பு விழா நடத்துகின்றனர்.

தனக்கு எதிராக அலை வீசுவதை அறிந்து கொண்டுதான் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஊர் முழுக்க சுற்றி வருகிறார் என அவர் பேசினார். 

தலைப்புச்செய்திகள்