Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவில் இணைவது குறித்து மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பேட்டி

பிப்ரவரி 18, 2021 03:14

கேரளா: டெல்லியில் முதன்முறையாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி பெரும் புகழ் பெற்றவர் ஸ்ரீதரன். இதுமட்டுமின்றி, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களின் நிர்வாகியாகவும் இருந்தார். இதனால் அவர் ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் என்றே அழைக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஸ்ரீதரன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியானது. கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக விஜய் யாத்திரா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது ஸ்ரீதரன் பாஜகவில் இணைவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி கேரளாவில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீதரன் போட்டியிடக்கூடும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன் கூறியதாவது: ‘‘கேரள மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணி செய்யவில்லை. கேரளாவுக்கு வளர்ச்சிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவே பாஜகவில் இணைவுள்ளேன். இதுமட்டுமே எனது நோக்கம். கட்சி விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன்.’’ எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்