Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்: கிரண்பேடியின் பேத்தி

ஏப்ரல் 06, 2019 08:38

புதுவை:  துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டி அவரது பேத்தி வெளியிட்டுள்ள செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நான் கிரண்பேடியின் ஒரே பேத்தி அம்மா, அப்பா இடையே உள்ள பிரச்சனையில் வரமாட்டேன் என்று கூறினீர்களே, இப்போது மட்டும் ஏன் பாட்டி அவர்களுக்கிடையே வருகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் போலீஸவை வைத்து ஏன் பாட்டி என் அப்பாவை மிரட்டுகிறீர்கள், அவரை கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்டுள்ளார். என்னை யாரும் கடத்தவுமில்லை மிரட்டவுமில்லை துன்புறுத்தவும் இல்லை என அவரது பேத்தி தெரிவித்துள்ளார்.  

அப்பாவோடு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு தனது தந்தையை காட்டுகிறார். எனது அம்மாவை நினைத்தும், பாட்டியை நினைத்தும் வெட்கப்படுகிறேன். என் அப்பாவுக்கு ஆதரவு தர விரும்புவோர் கருத்து பதிவிடுங்கள் என்று குறிப்பிட்டு வீடியோவை நிறைவு செய்கிறார். 

செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது 
அதனை நீக்க யூடியூப்புக்கு கிரண்பேடி தரப்பில் வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்