Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி கல்வித்துறை இயக்குநர் மாணவர்களுக்கு கூறிய அறிவுரையால் சர்ச்சை

பிப்ரவரி 19, 2021 04:12

புதுடெல்லி: அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் கேள்விக்குப் பதில் தெரியாவிட்டால், அதை அப்படியே விட்டுவிட்டு வராதீர்கள். எதையாவது எழுதிவிடுங்கள். முடிந்தால் அந்த கேள்வியைக்கூட எழுதுங்கள், ஆனால் காலியாக மட்டும் வைக்காதீர்கள் என்று டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராய் மாணவர்களிடம் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுடன் டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராய் நேற்று கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் உதித் ராய் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரையில் " அரசுத் தேர்வு எழுதும் மாணவர்கள், கேள்விக்கு பதில் தெரியாது என்பதற்காக அந்த கேள்வியை விட்டுவிடாதீர்கள். எதையாவது எழுதிவையுங்கள். உங்களின் தேர்வுத்தாளில் ஏதாவது எழுதியிருந்தால், நிச்சயம் மதிப்பெண் அளிக்கப்படும்.

முடிந்தால் கேள்வியை அப்படியேகூட பதில் எழுதும் தாளில் எழுதிவிடுங்கள். ஆனால், காலியாக மட்டும்விட்டு வைக்காதீர்கள். நாங்கள் ஆசிரியர்களிடம் பேசியிருக்கிறோம். பதில் எழுதும் தாளில் ஏதாவது மாணவர்கள் எழுதியிருந்தாலே மதிப்பெண் வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சிபிஎஸ்இ வாரியத்திடமும் தெரிவித்துள்ளோம். மாணவர்கள் ஏதாவது எழுதியிருந்தாலே மதிப்பெண் வழங்குங்கள் எனத் தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தார். இந்தவீடியோ சமூக வலைத்தலங்களில் ஓடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைப்புச்செய்திகள்