Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீண்டும் ஊரடங்கு அமல்- ஆணையர் தகவல்

பிப்ரவரி 20, 2021 04:00

பெங்களூரு :பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பேசும்போது கூறியதாவது:உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பெங்களூருவில் பரவியுள்ளது. தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ஆபத்தானது. இது வேகமாக பரவக்கூடியது.

அதனால் இத்தகைய வைரஸ்கள் பெங்களூருவில் பரவுவதை தடுக்க அதிகாரிகள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.உருமாற்றம் அடைந்த கொரோனா பரவுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உண்டாகும்.

பெங்களூருவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கூட்டங்கள், விழாக்களிலும் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேரளா, மராட்டியத்தில் சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.

தலைப்புச்செய்திகள்