Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொறுமையாக இருங்கள்- பொறுமையாக இருங்கள்- சீரம் நிறுவனம் வேண்டுகோள்

பிப்ரவரி 21, 2021 09:51

புதுடெல்லி:உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, அந்த மருந்தை பயன்படுத்தி தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தடுப்பூசி மருந்துகளை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 

அதன்படி பல்வேறு நாடுகள் சீரம் நிறுவனத்திடம் இருந்து மருந்து பெறுவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மருந்து தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு மருந்துகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கோவிஷில்டு மருந்துக்காக ஆர்டர் கொடுத்து காத்திருக்கும்  நாடுகள் மற்றும் அரசாங்கங்கள் பொறுமையுடன் இருக்கும்படி சீரம் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனவல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.

‘இந்தியாவின் தேவைகளுக்கே சீரம் முன்னுரிமை அளிக்கிறது. அதேநேரம் பிற நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. விரைவில் மருந்துகளை அனுப்புகிறோம்’ என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்