Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் : தமிழக அரசு

ஏப்ரல் 06, 2019 10:05

சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற நடிகருமான  டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் பெயரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு சூட்டும்படி கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதம் முன்பு தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார். 

பிரதமரின் அறிவிப்பை அடுத்து பெயரை மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  




 

தலைப்புச்செய்திகள்